Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தயாரிப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்- இயக்குனர் ராம் வருத்தம்!

vinoth
வியாழன், 26 ஜூன் 2025 (08:31 IST)
ஏழு மலை ஏழு கடல் படத்துக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது.

ஜூலை 4 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராம் அளித்த ஒரு நேர்காணலில் தன் படங்கள் ரிலீஸாவதே பெரிய விஷயமாக உள்ளது எனப் பேசியுள்ளார்.

அதில் “என் படங்கள் திரைக்கு வரும்போதே பிரச்சனைகளை எதிர்கொள்ளும். ஆரம்பத்தில் இருந்தே இதை நான் எதிர் கொள்கிறேன். என்னிடம் வரும் தயாரிப்பாளர்கள் நல்ல படைப்பைக் கொடுக்க ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்களும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். என்னுடைய கற்றது தமிழ் மற்றும் தங்க மீன்கள் போன்ற படங்கள் ரிலீஸானதே பெரிய விஷயமாக இருந்தது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் தயாரிப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்- இயக்குனர் ராம் வருத்தம்!

அப்பா வேற சொன்னதுக்காக ட்ரோல் பண்ணாங்க… ஆனா நான் ஃபீல் பண்ணல – சூர்யா விஜய்சேதுபதி பதில்!

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

அடுத்த கட்டுரையில்
Show comments