அப்பா வேற சொன்னதுக்காக ட்ரோல் பண்ணாங்க… ஆனா நான் ஃபீல் பண்ணல – சூர்யா விஜய்சேதுபதி பதில்!

vinoth
வியாழன், 26 ஜூன் 2025 (08:26 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் முடிந்து ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்துக்காக ப்ரமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்ட போது “அப்பா வேற நான் வேற” என்று தன்னுடைய சினிமா அறிமுகம் குறித்துப் பேசியிருந்தார். இது அவருக்கெதிராக ட்ரோல்களாக மாறியது. அது குறித்து இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “அப்படி நான் சொன்னதற்காக என்னை ட்ரோல் பண்ணாங்க. அதுக்காக நான் வருத்தப்படல. நான் சொல்ல வந்த விஷயத்தை சரியாக சொல்லலைனு ஃபீல் பண்ணேன். என் மேலயும் தப்பிருக்கு. ஆனா எனக்கு நெருக்கமானவங்க புரிஞ்சிகிட்டாங்க. அடுத்தமுறை ஒழுங்கா பேசணும்னு நினைக்கிறேன்” என முதிர்ச்சியோடு பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments