Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘உன் சத்தியத்த உலகத்துல எவனுமே நம்பமாட்டான்… ‘ கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராமின் பறந்து போ டீசர்!

Advertiesment
இயக்குனர் ராம்

vinoth

, வியாழன், 5 ஜூன் 2025 (11:53 IST)
ஏழு மலை ஏழு கடல் படத்துக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

இதையடுத்து நேற்று படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அப்பா மற்றும் மகன் சார்ந்த உணர்ச்சிப்பூர்வமானக் கதையாக ‘பறந்து போ’ இருக்கும் என்பதை டீசர் காட்டுகிறது. டீசரின் இறுதியில் இடம்பெறும் “ஆல் அப்பாஸ் ஆர் லையர்ஸ்’ என்ற வாசகம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவாக CWC புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!