Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுவனுக்கும் எந்த பிரச்சனையுமில்லை… ரசிகர்கள் என்னைத் திட்ட வேண்டாம் – இயக்குனர் ராம் !

Advertiesment
இயக்குனர் ராம்

vinoth

, ஞாயிறு, 15 ஜூன் 2025 (11:03 IST)
ஏழு மலை ஏழு கடல் படத்துக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த படத்துக்குப் பின்னணி இசை யுவன் ஷங்கர் ராஜாவும், பாடல்களுக்கான இசையை சந்தோஷ் தயாநிதியும் அமைத்துள்ளனர். வழக்கமாக ராமின் அனைத்துப் படங்களுக்கும் யுவன்தான் இசையமைப்பார். அவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவை. இந்நிலையில் இந்த கூட்டணி பறந்து போ படத்தில் பிரிந்தது என்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து இயக்குனர் ராம் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார். அதில் “இந்த படத்துக்கு முதலில் பாடல்கள் இல்லை. ஆனால் அதன் பின்னர் சின்ன சின்ன பாடல்களாக பண்ணலாம் என நினைத்தோம். அப்போது யுவன் துபாயில் இருந்தார். அவரால் இங்கு வர முடியவில்லை. அவர்தான் வேறு யாரையாவது வைத்துப் பண்ணிக் கொள்ளுங்கள் என்றார். அதனால் எனக்கும் யுவனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. யுவன் ரசிகர்கள் எனனைத் திட்டி மெஸேஜ்கள் அனுப்ப வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த படத்தை சுற்றி நிறைய நெகட்டிவிட்டி இருக்கு… மார்கோ 2-ஐக் கைவிட்ட உன்னி முகுந்தன்!