கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து நடிகர், இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
எது நடந்ததோ
அது….. நன்றாகவேவா ?
நடந்தது.
எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவேவா நடக்கிறது?
ஆனால்,
எது நடக்க இருக்கிறதோ
அது மட்டும் நன்றாகவே நடக்குமென
நம்புவோமாக….!
-புதிய கீதை
கூட்டம் என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்…. 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி,(இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்க சொல்லி
கொடுத்து வைத்தவர்கள்
ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க!அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்!