Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணு ஆயுத மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்! - ஐ.நாவில் வைத்து இந்தியா விடுத்த எச்சரிக்கை!

Advertiesment
Pakistan PM

Prasanth K

, சனி, 27 செப்டம்பர் 2025 (10:30 IST)

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்தியா பல விஷயங்களை பேசியுள்ளது.

 

ஐ.நா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் ட்ரம்பை அமைதியின் மனிதர் என புகழ்ந்து தள்ளியதுடன், இந்தியாவுடன் அமைதியாக போகவே தாங்கள் விரும்புவதாக பேசியிருந்தது.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய இந்தியா “ பாகிஸ்தான் அமைதியை விரும்பினால், இந்தியாவிடம் முக்கிய பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்து ஒழிக்க வேண்டும். 

 

இந்தியா அணு ஆயுத மிரட்டல்களுக்கு அஞ்சாது, பணியாது. அணு ஆயுத மிரட்டலின் பின்னணியில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கின்றனர். இருநாட்டு பிரச்சினைகளை இரு நாடுகளுமே பேசி தீர்த்துக் கொள்ளும். இந்த பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையீட்டுக்கு இடமில்லை” என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சர் வீட்டை சுற்றி 110 ஏஐ கேமராக்கள்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!