பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 20 போட்டியாளர்களில் 9 பேர் வெளியேறியுள்ள நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, வெளியேற்றப்பட்ட போட்டியாளரான ஆதிரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வெளியிலிருந்து பார்த்து வந்த அனுபவத்துடன் ஆதிரை திரும்பியிருப்பது, நிகழ்ச்சியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரொமோவில், போட்டியாளர்களான பார்வதி, கம்ருதீன் மற்றும் FJ ஆகிய மூவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடிக்கிறது.
FJ, கம்ருதீனிடம், "மூணு நாள் தான் தூங்குனேன் என்று சொல்லிவிட்டு, கேம்-ல் என்ன பண்ணினீர்கள்? உன்னை மாதிரி நான் பார்வதிக்கு சப்போர்ட் செய்யவில்லை" என்று சண்டைக்கு இழுக்கிறார்.
இதற்கு ஆவேசமாக பதிலளித்த பார்வதி, "என்னை வைத்து சண்டை போடுவதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நீ யார் என்னை பற்றிப் பேசுவதற்கு?" என்று FJ-யிடம் கோபத்துடன் கத்துகிறார். இந்த சண்டை அடுத்த வார ஆட்டத்தின் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.