தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்பகாலங்களில் இவர் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கடின உழைப்பாலும் முயற்சியாலும் இன்று இவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருக்கிறார். இன்னொரு பக்கம் அவருடைய நீண்ட நாள் ஆசையான கார் ரேஸிலும் ஜொலித்து வருகிறார். இந்த நிலையில் ரோஜா கம்பைன்ஸ் நிறுவனர் காஜா முகைதீன் அஜித் படத்தால் தனக்கு நேர்ந்த துயரத்தை ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.
இது அவர் பல பேட்டிகளில் கூறினாலும் இன்னும் பல விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனந்த பூங்காற்றே படத்தை தயாரித்தவர் காஜா முகைதீன். அந்தப் படத்தின் இயக்குனர் ராஜ்கபூர். அந்த சமயத்தில் அஜித் எப்படி இந்தப் படத்தில் நடித்தார் என்பதை பற்றி பல பேட்டிகளில் கூறியுள்ளார். மருத்துவமனையில் அஜித் இருந்த போது பிரசாந்த் நடிப்பதை அறிந்த அஜித், இந்தப் படத்தில் நான் தான் நடிக்கணும், வேணும்னா இன்னும் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன். என்றும் அஜித் கூறியுள்ளார்.
கண்ணீர் விட்டு கேட்டிருக்கிறார். அஜித் அழுததும் காஜா முகைதீன் ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்தான் நடிக்கணும் என உறுதியோடு ஒரு வருஷம் காத்திருந்தாராம் காஜா முகைதீன். சொன்னப் படி ஆனந்த பூங்காற்றே படத்தையும் அஜித்தை வைத்து எடுக்க அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு பாட்டாளி, சந்தித்த வேளை, பெண்ணின் மனதை தொட்டு என இப்படியான படங்களை எடுத்து ஒரு நல்ல நிலைமையில் இருந்தாராம் காஜா முகைதீன். அந்த நேரத்தில் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி , அஜித்தின் கால்ஷீட் இருக்கிறது. உடனே படத்தை ஆரம்பிக்கலாம் என காஜா முகைதீனிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் காஜா முகைதீனுக்கு கொஞ்சம் தயக்கம். ஏனெனில் அஜித் அப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்திருக்கிறார். இருந்தாலும் ஃபைனான்சியரிடம் கடன் வாங்கி அஜித்துக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து படத்தை ஆரம்பித்திருக்கிறார் காஜா முகைதீன். சாஜா கைலேஷை வைத்து படத்தையும் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு 20 நாள்கள் படத்தை எடுக்க பல லட்சம் செலவு ஆகிவிட்டது. அத்தோடு படம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதனை அடுத்து கதைக்கு என்ன செய்வது என யோசிக்க கலிகலம் என்ற மலையாள படத்தின் கதையை வாங்கியிருக்கிறார் காஜா முகைதீன்.
அந்த படத்தின் ரைட்டர் எஸ்.என். சாமி. அவரை வைத்தே தமிழிலும் கதையை ரெடி பண்ண சொல்லியிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சாஜி கைலாஷ் தெலுங்கில் படம் பண்ண போய்விட்டாராம். இதற்கிடையில் வேறொரு இயக்குனரை வைத்து இந்த கலிகலம் படத்தின் கதையை வைத்து அஜித்தை ஹீரோவாக வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி யாருக்கும் தெரியாமல் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். காஜா முகைதீனும் சக்கரவர்த்தியிடம் கால்ஷீட் கேட்க கேட்க அதை தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தாராம். இது அஜித்துக்கு தெரிந்து நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை.
அப்புறம் அந்தப் படத்தின் ப்ரிவியூ ஷோவை தியேட்டரில் போட, அது கலிகலம் படத்தின் கதை. இந்தப் படத்தை எடுத்த இயக்குனர் காஜாமுகைதீனுக்கு தெரிந்த இயக்குனர்தானாம். இந்த பிரிவ்யூவை பார்த்த எஸ்.என். சாமியும் அடப் பாவிங்களா? நீங்க நல்லா இருக்கவே மாட்டீங்கடா என சொல்லி வெளியில் இருந்த மண்ணை வாரி இறைத்து சாபம் விட்டு போனாராம். அவர் சொன்ன படி சக்கரவர்த்தி நிலமை கடைசியில் என்ன ஆனது என எல்லாருக்கும் தெரியும் என காஜா முகைதீன் கூறியுள்ளார்.