சீனாவில் குடிகொண்டு உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பரவி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள் இருக்கவேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கிறோம்.
இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் 24 மணி நேரமும் சமூவலைத்தளங்களில் நேரத்தை செல்விட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது பிரபல நடிகர் அருண் விஜய் தனது வீட்டின் மாடியில் உடற்பயிச்சி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, நீண்ட காலத்திற்கு பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். நீங்களும் வீட்டிலேயே இருந்து பிட்டாக உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். இன்னும் 21 நாட்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என விழிப்புணர்வு கருத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் அண்ணா நிச்சயம் வெளியில் செல்லமாட்டோம் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என அக்கறையாக கமென்ஸ்ட் செய்துள்ளனர்.