வீட்டுல இருக்க போர் அடிக்குதா? என்கூட பேசுங்க – சாயிஷா ட்வீட்!

வியாழன், 26 மார்ச் 2020 (11:10 IST)
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் சாயிஷா ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உயிர்பலியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை இந்தியாவில் கட்டுப்படுத்தும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே நடமாடாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடிக்கடி சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க #Ask என்ற ஹேஷ்டேகை பயன்படுத்துவது வழக்கம். தற்போது நடிகை சாயிஷா இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தியுள்ளார். வனமகன், காப்பான் போன்ற படங்களில் நடித்த சாயிஷா கடந்த ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

#AskSayyesha என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி இன்று மாலை முதல் ரசிகர்கள் கேட்குள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக நடிகை சாயிஷா டிவிட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.

Let’s chat at 7pm today? Keep your questions ready! ❤️ #AskSayyeshaa pic.twitter.com/7ItF3amMEV

— Sayyeshaa (@sayyeshaa) March 26, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அடப் பாவிகளா... அப்படியே என் குரல் மாதிரியே இருக்கே- உல்ட்டா மீமிற்கு விவேக் ரியாக்ஷன்!