பிரபல நடிகருக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டி பாப்பா - சூப்பர் கியூட் வீடியோ இதோ!

வியாழன், 26 மார்ச் 2020 (09:56 IST)
KGF படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டாராக திகழும் நடிகர் யாஷ் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார்.  இவர் மொக்கின மனசு என்ற படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ராதிகா பண்டிட்டை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதையடுத்து இந்த தம்பதிக்கு 2018 ஆம் ஆண்டு அய்ரா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. அய்ரா கன்னட சினிமா ரசிகர்களிடையே பெரும் பேமஸ். அதற்கு காரணம் யாஷ் அடிக்கடி  அய்ராவின் கியூட் வீடியோக்களை சமூகலைத்தளத்தில் பதிவிடுவது தான்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணத்தால் வீட்டில் இருந்து வரும் யாஷ் தனது முழு நேரத்தை மகளுடன் செலவிட்டு வருகிறார். தற்போது தனது செல்ல மகள் அய்ராவுக்கு சாப்பாடு கொடுக்க கஷ்டப்பட்டபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சாப்பிட அடம்பிடிக்கும் அய்ரா அதனை அப்பாவுக்கு ஊட்டிவிடுகிறாள். பலரின் மனம் கவர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

And i surrender...❤ P.S " Perks of home quarantine " my t'shirt doesn't agree though

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வீடு கூட்டி பாத்திரம் கழுவும் கத்ரீனா கைஃப் - அடேய் கொரோனா என் செல்லத்த இப்படி ஆக்கிட்டியேடா!