அவர் தான் என்னுடைய "crush"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்!

புதன், 25 மார்ச் 2020 (19:13 IST)
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்து வந்தபோது எஸ். ஜே சூர்யாவுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார். ஆனால், அது வெறும் வதந்தி என்று எஸ். ஜே சொல்லிவிட்டார். பிரியா பவானி ஷங்கர் அதுகுறித்து வாய் கூட திறக்காமல் மௌனம் காத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் திரையுலகத்தில் உங்களது Crush யார் என்று கேட்டதற்கு, “எனக்கு எப்போதும் மாதவன் சாரைத் தான் பிடிக்கும். அவர் தான் என்னுடைய ஆல் டைம் Crush என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பெத்தவங்கள சாவடிக்காதடா.... லாரன்ஸ் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ!