வீடு கூட்டி பாத்திரம் கழுவும் கத்ரீனா கைஃப் - அடேய் கொரோனா என் செல்லத்த இப்படி ஆக்கிட்டியேடா!

வியாழன், 26 மார்ச் 2020 (09:28 IST)
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை அழித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.

இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் 24 மணி நேரமும் சமூவலைத்தளங்களில் நேரத்தை செல்விட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது பிரபல பாலிவுட் நட்சத்திர நாயகி கத்ரீனா கைஃப் நேற்று முன் தினம்  பாத்திரங்களை கழுவும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது துடப்பத்தால் வீட்டை கூட்டி பெருக்கி  சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விவாகரத்து பெற்ற பிரபல தம்பதியை சேர்த்து வைத்த கொரோனா....!