Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடப் பாவிகளா... அப்படியே என் குரல் மாதிரியே இருக்கே- உல்ட்டா மீமிற்கு விவேக் ரியாக்ஷன்!

அடப் பாவிகளா...  அப்படியே என் குரல் மாதிரியே இருக்கே- உல்ட்டா மீமிற்கு விவேக் ரியாக்ஷன்!
, வியாழன், 26 மார்ச் 2020 (11:02 IST)
தமிழகத்தில் எப்பேற்பட்ட உயிர் போகும் பிரச்னை என்றாலும் அதனை மீம்ஸ் போட்டு சாகும் தருவாயிலும் சிரிக்க வைப்பார்கள் நம்ம ஊர் இளைஞர்கள். அதற்கு முக்கிய மூல காரணமே மீம்ஸ் கிரேட்டர்களுக்கு காமெடி சிங்கங்களாக திகழும் வடிவேலும், விவேக்கும் தான்.

அவர்களது காமெடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து வித விதமான மீம்ஸ்களை போட்டு சமூகவலைத்தளத்தில் தாண்டவமாடுவார்கள். அந்தவகையில் தற்போது நடிகர் விவேக் நடித்த பார்த்திபன் கனவு படத்தில் வரும் காமெடி காட்சி டெம்ப்லேட் வைத்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த மீம் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அந்த வீடியோவில் வரும் குரல் விவேக்கின் குரல் போன்றே உள்ளது தான் அது வைரலானதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் விவேக் " மீம்சு பசங்க சூப்பர்! Memes boys r really awesome!! கிட்ட தட்ட என் குரல் போலவே இருக்கு!!!! அடப் பாவிகளா" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவை கண்முன் காட்டிய கோன்டஜியோன்! – இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?