இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து, இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசியதால், தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்கம் மற்றும் ரியான் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை தென்னாப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.
இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம்:
இந்தியா
கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் , வாஷிங்டன் சுந்தர் , ஷுப்மன் கில் , ரிஷப் பந்த் , ரவீந்திர ஜடேஜா , துருவ் ஜூரல் , அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
தென்னாப்பிரிக்கா :
ஐடன் மார்க்கம், ரியான் ரிக்கெல்டன் , வியாண் முல்டர் , டெம்பா பவுமா , டோனி டி சோர்சி , டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , கைல் வெர்ரைன் , மார்கோ ஜான்சன் , கார்பின் போஷ் , சைமன் ஹார்மர் ,கேசவ் மஹாராஜ்