தற்போது கிரிக்கெட் விளையாடும் அணிகளில் மூன்று விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்தியா உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது ஒரே நாளில் மூன்று விதமான போட்டிகளில் விளையாடினாலும் அதற்கேற்ப வீரர்களைக் கொண்டுள்ளது.
இந்திய அணித் தேர்வுக்குழுவினருக்கு மிகப்பெரும் தலைவலியாக இருப்பது எந்த வீரரை அணியில் தேர்வு செய்வது என்பதுதான். அந்தளவுக்கு தற்போது சிறப்பான கட்டமைப்பில் உள்ளது இந்திய அணி. அதற்கு சாட்சியாக ஒருநாள் போட்டிகளுக்கான் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை வெளியாகியுள்ளது.
அதில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா முதலிடத்திலும், ஷுப்மன் கில் நான்காம் இடத்திலும், விராட் கோலி ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். இதில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிகாலத்தில் இருக்கும் மூத்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.