சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஜடேஜா வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்று வதந்திகள் கிளம்பி கொண்டிருக்கும் நிலையில், ஜடேஜா விருப்பப்பட்டுதான் எங்கள் அணிக்கு வந்தார் என்று ராஜஸ்தான் அணி உரிமையாளர் மனோஜ் என்பவர் பேட்டி அளித்துள்ளார்.
"நான்கு வாரங்களுக்கு முன்பே ஜடேஜா என்னை தொடர்புகொண்டு, மீண்டும் தனது முதல் வீட்டிற்கு திரும்ப யோசித்து வருவதாக கூறினார். அவர் கூறிய பின்னர்தான் அனைத்துமே தொடங்கியது," என்றும் அவர் தெரிவித்தார்.
ஜடேஜா தனது ஐ.பி.எல். வாழ்க்கையை ராஜஸ்தான் அணியில் இருந்துதான் தொடங்கினார் என்றும், தற்போது மீண்டும் தனது முந்தைய அணிக்கு வந்துள்ளார் என்றும் மனோஜ் கூறினார். "கடைசியாக 21 வயது இளம் வீரராக அவரை பார்த்தேன். தற்போது ஒரு அனுபவம் உள்ள மூத்த வீரராக அவரை மீண்டும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் ஜடேஜா விருப்பப்பட்டுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.