இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் எடுத்த நிலையில், தற்போது இந்தியா வெற்றி பெற 124 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது. தற்போது இந்திய அணி களத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
முதல் இன்னிங்ஸில் பும்ரா அபாரமாக பந்துவீசிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.