திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தகாத உறவு தொடர்பான தகராறில், ஒரு பெண் மரக்கடை உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசியை சேர்ந்த மரக்கடை உரிமையாளர் சின்னப்பராஜ் என்பவருக்கும், பூமணி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. நேற்று இரவு பூமணி வீட்டிற்கு சின்னப்பராஜ் வந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில், பூமணி சின்னப்பராஜை தாக்கியுள்ளார். கீழே விழுந்த அவர் மீது ஆத்திரமடைந்த பூமணி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சின்னப்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்கு பிறகு பூமணி உடனடியாக அவிநாசி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதுடன், வழக்குப்பதிவு செய்து பூமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அவிநாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.