டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
செங்கோட்டை பகுதிக்கு மூன்று நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், புலனாய்வு அமைப்புகளின் அறிவுறுத்தலின்படி, அருகிலுள்ள லால் கிலா மெட்ரோ நிலையமும் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டுள்ளது.
நேற்று மாலை 'ஹுண்டாய் ஐ-20' கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது, அம்மோனியம் நைட்ரேட் எரிபொருளை பயன்படுத்தி நடத்தப்பட்ட பயங்கரவாத சதி எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, டாக்டர் முகமது உமர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.