தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் வினோத்குமார். இவரது மனைவி நித்யா, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது 3 குழந்தைகளான ஓவியா, கீர்த்தி, ஈஸ்வரன் ஆகியோரை பிரிந்து, திருவாரூரை சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதலில் சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கும், மதுப்பழக்கத்திற்கும் ஆளான வினோத்குமார், தனது மனைவி மீதான ஆத்திரத்தில் நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
பின்னர், கோபத்தின் உச்சியில், ஈஸ்வரனை தூக்கி வைத்து கொஞ்சியதுபோல நடித்து, அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதை தொடர்ந்து, வெளியே விளையாட சென்றிருந்த மற்ற இரண்டு மகள்களையும் அழைத்து, அவர்களையும் அடுத்தடுத்து கழுத்தை அறுத்து மிக கொடூரமாக கொலை செய்தார்.
இந்த கொடூரச் சம்பவத்திற்கு பிறகு, வினோத்குமார் மதுக்கூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.
மனைவியின் கள்ள உறவால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 3 குழந்தைகளை ஒரு தந்தையே கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.