மத்திய டெல்லி ராம் நகர் பகுதியில் கள்ளக்காதல் தகராறு காரணமாக நடுவீதியில் இரண்டு பேர் குத்திக் கொல்லப்பட்டனர்.
கர்ப்பிணிப் பெண்ணான ஷாலினி என்பவரை அவரது கள்ளக்காதலன் ஆஷு பொதுமக்கள் கண்முன்னே கத்தியால் குத்திக் கொன்றார்.
கள்ளக்காதலில் இருந்து மீண்டு ஷாலினி தனது கணவர் ஆகாஷ் மீண்டும் வாழ தொடங்கியதால் ஆஷு ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. மேலும், ஷாலினி வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் தந்தை என்று ஆஷு உரிமை கோரியுள்ளார்.
நேற்றிரவு ஷாலினியை தாக்கிய ஆஷு, அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஆகாஷும் குத்தப்பட்டார். இருப்பினும், ஆகாஷ் ஆஷுவிடமிருந்து கத்தியை பிடுங்கி, அவரை குத்திக் கொன்றார்.
மருத்துவமனையில் ஷாலினியும் ஆஷுவும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். ஷாலினியின் கணவர் ஆகாஷ் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஷாலினியின் தாயின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.