கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, நள்ளிரவு நேரத்தில் வீடு வீடாக சென்று கதவை தட்டி, "நான் ஆபத்தில் இருக்கிறேன், உதவி செய்யுங்கள்" என்று ஒரு பெண் கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பெண் வீடு வீடாகச்சென்று, "அடிபட்டு வந்திருக்கிறேன், ஹெல்ப் பண்ணுங்க சார், ஹெல்ப் பண்ணுங்க அக்கா" என்று தொடர்ந்து சத்தம் எழுப்பினார். இதனை கேட்ட மக்கள், ஒருவேளை இது கொள்ளை கும்பலின் கவனத்தை ஈர்க்கும் செயலாக இருக்குமோ என்று நினைத்து அச்சத்தில் உறைந்தனர்.
உடனடியாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண்ணை கண்டுபிடித்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்த சில நாட்களாக பர்கூர் பகுதியில் சுற்றி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அவரால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறிய காவல்துறையினர், அதே நேரத்தில் கொள்ளைக் கும்பல் இதே போன்ற முறையை பின்பற்ற வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.