Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

Advertiesment
Minister Chakrabani

Web Desk

, செவ்வாய், 28 அக்டோபர் 2025 (15:53 IST)

"இந்த மாதிரி நிகழ்ச்சி ஏற்கனவே நடந்திருக்கு ..ஆனா இதுதான் பர்ஸ்ட் டைம் என ஒரு தாத்தா சிவகாத்திகேயனின் "பிரின்ஸ்" படத்தில் ஒரு டயலாக் பேசுவாரு அந்த டயலாக் இந்த அமைச்சருக்கு ரொம்பவே பொருந்தும், ஆமாம் இதுக்கு முன்னாடி அமைச்சர் சக்கரபாணி தனக்கான கோஷ்டியை உருவாக்கி பவர் பாலிடிக்ஸ் பண்ணுவாரு ஆனா கிருஷ்ணகிரியில் பண்ணின பாலிடிக்ஸ் முதல்தடவை என சொல்கிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவினர்.

 

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 10 வருஷமா ரொம்பவே கஷ்டப்பட்டோம்... கட்சியை கட்டுக்கோப்பா வச்சிட்டு இருந்தோம் லோக்கல்ல கஷ்டப்பட்டு நாங்க கட்சியை வளர்த்து வச்சா  ஏதோ ஒரு மாவட்டத்திலிருந்து இங்க வந்து சொந்த பெனிஃபிட்க்காக தனக்கான கோஷ்டியை உருவாக்கிய லோக்கல் நிர்வாகிகளை இப்படி கலகத்தை உண்டுபண்ண கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணிக்கு எதிராக லோக்கல் திமுகவினர் கடுப்பில் உள்ளார்களாம்.

 

திண்​டுக்கல் மாவட்ட திமுக-வில் மூத்த அமைச்சரான ஐ.பெரிய​சாமி​யும், அவரது மகன் செந்தில்​கு​மாரும் அசைக்​க​முடியாக சக்தியாக இருக்​கி​றார்கள். ஐபி-யை மீறி அங்கு சக்கர​பாணியால் பெரிதாக எதையும் செய்து​விட​முடி​யாது. ஒட்டன்சத்திரம் சக்கரபாணி, செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும் ஐ.பி.க்கு அடுத்ததாகத்தான் வைத்திருந்தது திமுக தலைமை.  திமுக 2 ஆக பிரிக்கப்பட சக்கரபாணி கோஷ்டிக்கு அடித்தது ஜாக்பாட் என்பது போல ஐ.பெரியசாமி கோஷ்டியை  கட்டி ஆண்டு வந்தார் சக்கரபாணி லோக்கலில் உள்ளாட்சி பேரூராட்சி என அனைத்திலும் தனது ஆதரவாளர்களுக்கே அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து ஐ.பெரியசாமி ஆட்களுக்கு டிமிக்கி கொடுத்தார். 2016 ல் சட்டமன்ற கொறடாவாக  இருந்த இவர் 2021 வரை தொகுதியில் தன்னுடைய கோஷ்டி பலத்தால் செல்வாக்கான நபராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார். 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அர.சக்கரபாணி தான் இப்போது லோக்கல் திமுகப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஓட்டஞ்சத்திரத்தைப்போலவே இங்கும் அவர் தனக்கான கோஷ்டியை தன்னுடைய சுயலாபத்திற்காக உருவாக்கி வைத்துள்ளாராம். 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்த்திற்கு வரும்போதெல்லாம் அமைச்சர் சக்கரபாணிக்கு பேனர் வைப்பதில் தொடங்கி பிரமாண்ட வரவேர்ப்பளிப்பது என எல்லாமே அந்த கோஷ்டிகள் பண்ணும் அலப்பறை தானாம். லோக்கலில் உள்ள திமுகவினர் சொல்வதை காது கொடுத்து கூட கேட்பதில்லையாம். அடிமட்ட தொண்டர்களை மதிப்பதே இல்லையாம், திமுக தொண்டர்கள் மனநிலை என்ன? களநிலவரம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறதென்று கூட இதுவரை அடிமட்ட தொண்டர்களிடம் கேட்டதில்லையாம்.  இவர் உருவாக்கி வைத்துள்ள கோஷ்டியினர் கொடுக்கும் பிரமாண்ட வரவேற்ப்பில் குஷியாகும் இவர் அதே குஷியில் அவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு அப்படியே ரிட்டர்ன் சென்று விடுகிறாராம். 

 

பொறுப்பு அமைச்சராக நியமித்ததிலிருந்து அரசு நிகழ்ச்சிகளில் பொறுப்பு அமைச்சர் என்ற கடமைக்கு மாவட்டத்திற்கு வரும் சக்கரபாணியின் சமீபத்திய செயல்பாடுகள் அந்த மாவட்ட நிர்வாகிகளில் பலருக்கு அதிருப்தியாம். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக மதியழகன் உள்ளார்.  ஒய்.பிரகாஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இருவரும் ஒரே மாவட்டமாக இருந்தாலும் இந்த இரண்டு மாவட்ட  எந்த ஈகோவும் இல்லாமல் கட்சிப் பணிகளை செய்து வருகிறார்கள் ஆனால், இரண்டு இடத்திலேயும் தன்னுடைய சுய லாபத்துக்காக கோஷ்டியை உருவாக்கி வைத்திருப்பது தெரிந்து அதிர்ந்து போனார்களாம். தேர்தலுக்கு முன்பே தலைமை வரை கொண்டு செல்லும் முடிவில் இருக்கிறார்களாம்.  

 

சக்கரபாணியின் சுயநலத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில் திமுகவிக்கு பின்னடைவு ஏற்படுவது சந்தேகமே இல்லை ."எங்க போனாலும் அந்த ஊர் நம்ம ஆளும். அந்த ஊர்ல ஒரு கலக்கு கலக்கணும். இந்த ஊருக்கு நம்ம யார்னு காமிக்கணும்" என சினிமா வில்லன் ஸ்டைலில்  தனது சுயலாபத்திற்காக செயல்படும்  சக்கரபாணி மீது கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது 

 

அதேபோல், 6  தொகுதிகளிலும் திமுக ஜெயிக்க வைத்து ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவார் என பார்த்தால் 6 தொகுதிகளிலும் தன்னுடைய சுயலாபத்திற்காக கோஷ்டியை உருவாக்கி வைத்திருப்பது மாவட்ட செயலாளர்களை. எம்.எல்ஏக்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி  மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு அமைச்சரின் கோஷ்டிகளால்  கிருஷ்ணகிரி திமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. பொறுப்பு அமைச்சரின் இந்த கோஷ்டி அரசியலால் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளே போர்க்கொடி தூக்கி வருகின்றார்களாம். 

 

 

இதேபோல ஏற்கனவே திருவாரூரில், லோக்கல் திமுகவினரிடையே சக்கரபாணி கோஷ்டியை  உருவாக்கி தனி பாலிடிக்ஸ் பண்ணது லோக்கல் திமுகவினரை ரொம்பவே நொந்துபோக  செய்ததாம், இதனால் கடுப்பான பூண்டி கலைவாணன் இந்த விஷயணத்தை தலைமை வரை கொண்டு சென்றுருக்கிறார். இதன் காரணமாகவே திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்பட்ட அமைச்சர் சக்கரபாணியை, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. "போற இடத்துலல்லாம் இப்படி ஏல்ரையை கூட்டினா என்னத்த தான் பண்றது?"


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!