நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டின் கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, புதிய உயர் கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட மொத்தம் 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், வாக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வழக்கம் போல் நாடாளுமன்றம் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் ஸ்தம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.