வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நானும் ரௌடிதான் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான ஆர் ஜே பாலாஜி, அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள கருப்பு படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் கதாநாயகனாக நடிக்கக் கதைகள் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை அவர் படமாக்கி வரும் நிலையில் அவரைப் பற்றிய ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து சுந்தர் சி விலகிய நிலையில் பல இயக்குனர்களிடம் கதைக் கேட்டு வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் தற்போது ஆர் ஜே பாலாஜியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது சம்மந்தமான சந்திப்பு ஆர் ஜே பாலாஜி மற்றும் ரஜினி இடையே நடக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி விஜய்க்காக ஒரு கதை எழுதி அவரிடம் அதை விவரித்தார். அந்த கதை பிடித்திருந்த போதும் விஜய்யால் அந்த கதையில் நடிக்க முடியவில்லை என ஆர் ஜே பாலாஜி பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இப்போது ரஜினிக்காக அந்த கதையைதான் பட்டி டிங்கரிங் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.