தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், சென்னையில் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய நிலையில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
"மழையால் மக்கள் யாரும் பெரிதும் பாதிக்கப்படவில்லை. நகரில் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேக்கம் இல்லை. மக்கள் இயல்பு வாழ்க்கையில் எளிதில் பயணிக்கின்றனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யை விமர்சித்து பேசிய டிகேஎஸ் இளங்கோவன், "ஒருவேளை விஜய் வீட்டில் நீர் தேங்கியிருக்கலாம். ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. நகரில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியாது. அவர் நகர் முழுவதும் சென்று பார்த்தாரா? அவர் வீட்டிலிருந்து பேசுகிறார், அவ்வளவுதான்," என்று காட்டமாக கூறியுள்ளார்.
மேலும், கடந்த மூன்று நாள்களாக மழை பெய்த போதிலும், அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தற்போது சென்னையில் நீர்த் தேக்கம் மிக குறைவாகவே உள்ளது என்றும், இது திமுக அரசின் செயல்திறனை காட்டுவதாகவும் அவர் நியாயப்படுத்தியுள்ளார்.