Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தமுறை அதிக தொகுதி!.. காங்கிரஸ் போடும் ஸ்கெட்ச்!.. சமாளிக்குமா திமுக?!...

Advertiesment
dmk

BALA

, புதன், 3 டிசம்பர் 2025 (14:38 IST)
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல்களம் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது. குறிப்பாக யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகள்? என்பது பற்றி கூட்டணி கட்சியில் யோசிக்க துவங்கியிருக்கிறது. ஒரு பக்கம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 தேர்தலில் போட்டியிடவிருப்பதால் தமிழக அரசியல் களத்தின் முகமும் கொஞ்சம் மாறியிருக்கிறது.

வழக்கம்போலவே இந்த முறையும் திமுக பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. எப்போதும் போல் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட சில கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் திமுகவுடன் கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே இந்த முறை அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டிருக்கிறதாம். குறிப்பாக கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகள் வென்ற தமிழக காங்கிரஸ் இந்த முறை திமுகவிடம் 40 தொகுதிகளை கேட்க திட்டமிட்டிருக்கிறதாம். இதற்காக சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது.

இது திமுகவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவங்கும் என்கிறார்கள். இப்படி எல்லா கட்சிகளுமே அதிக தொகுதிகளை கேட்டால் திமுக எப்படி சமாளிக்கும் என்பது தெரியவில்லை. எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என பேசி முடிப்பது திமுக முன்னால் இருக்கும் பெரிய சவால்தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!