விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 27 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜயின் கடைசி படம் என்பதால் இசை வெளியீட்டு விழாவில் பல சிறப்பம்சங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிக்கல் உரிமை 250 கோடி வரை விற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதை வாங்கியவர்களுக்கு லாபம் தர வேண்டும் என்றால் படத்தின் வசூல் கண்டிப்பாக 500 கோடியை எட்டினால் தான் இந்த படத்தை வாங்கியவர்களுக்கு லாபமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் ஜனநாயகன் படத்திற்கு அதனுடைய கலெக்ஷன் ஒரு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை வாங்க பலபேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு முன் தமிழ் நாடு தியேட்டரிக்கல் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்குவதாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குள் பல பேருக்கு இதன் தியேட்டரிக்கல் உரிமையை பிரித்து கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டது. அதனால் ராகுல் அதன் என்.ஓ.சியை தர முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அதன் தியேட்டரிக்கல் உரிமை விற்று இருப்பதாக கூறப்படுகிறது.