Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவுக்கு தாவிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

Advertiesment
dmk

BALA

, புதன், 3 டிசம்பர் 2025 (15:03 IST)
2026 சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் துவங்கவிருப்பதால் தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. ஒருபக்கம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் இறங்கிவிட்ட நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பல திருப்பங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது.. எவ்வளவு தொகுதிகள் கேட்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். திமுகவை பொருத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சியோடு கூட்டணி அமைத்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் இந்தமுறையும் கூட்டணியில் தொடரும் என கணிக்கப்படுகிறது.

ஒருபக்கம் ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்கு தாவும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் யாருமே எதிர்பார்க்காத படி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி இன்று தன்னை திமுகவில் இணைத்து கொண்டிருக்கிறார்.

சின்னசாமி கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர். மேலும் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமாகவும் இருந்திருக்கிறார். இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு சென்று மு.க ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டிருக்கிறார்
. அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தமுறை அதிக தொகுதி!.. காங்கிரஸ் போடும் ஸ்கெட்ச்!.. சமாளிக்குமா திமுக?!...