திமுக எப்போதும் இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை.. இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.. இந்துக்களின் சமய நம்பிக்கையை மதிப்பதில்லை என்று பல வருடங்களாகவே பாஜக போன்ற கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கெல்லாம் திமுக எந்த விளக்கமும் கொடுப்பதில்லை.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோயில்களை தமிழக அரசு அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாஜக போன்ற கட்சிகளுக்கு பிடிப்பதில்லை. எனவே கடுமையான எதிர்ப்பை அவர்கள் காட்டி வருகிறார்கள்.இந்நிலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள பல கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனல், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாத நிலை இருக்கிறது.
ஏனெனில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் அதை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது
இந்நிலையில் இன்று செய்தியாளரிடம் பேசிய வானதி சீனிவாசன் இந்துக்களின் நம்பிக்கை.. இந்துக்களின் கடவுள் வழிபாடு, இந்துக்களின் உரிமையை என்றாலே திமுகக்கு எப்போதும் இரண்டாம் பட்சம்தான். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்த மறுக்கிறார்கள்.. திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.. அந்த கோவில் எங்கோ வேறு மாநிலத்தில் இல்லை. தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி விசித்திரமாக நடக்கிறதுஎன்று கோபப்பட்டு பேசியிருக்கிறார்.