தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதல் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடர இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் நடந்து சுமார் 55 நாட்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் இன்று அவர் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மக்களை இன்று காலை 11 மணிக்கு சந்திக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த முறை நடந்தது போன்ற விபரீதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.