நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Mahendran
வெள்ளி, 7 நவம்பர் 2025 (17:25 IST)
தமிழகத்தில் நிரந்தர டி.ஜி.பி) நியமிக்காதது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
முன்னாள் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ல் ஓய்வு பெற்ற பிறகு, டி.ஜி.பி. நிலையிலான ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமன் சட்டம்-ஒழுங்கு பிரிவின் பொறுப்பு டி.ஜி.பி.யாகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
 
டி.ஜி.பி. நியமன நடைமுறையின்படி, மாநில அரசு அனுப்பிய தகுதிப்பட்டியலில் இருந்து வெங்கட்ராமனை விட மூத்த அதிகாரிகளின் பெயர்களை யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்துள்ளதாகவும், அந்த பட்டியலை மாநில அரசு ஏற்காததாலேயே நிரந்தர நியமனத்தில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
 
யு.பி.எஸ்.சி. பரிந்துரையின் அடிப்படையில் டி.ஜி.பி.யை நியமிக்க தவறியதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்: ஈபிஎஸ்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments