இந்தியா முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல மாநிலங்களிலும் நாய்கள் பெருகிவிட்ட நிலையில் மக்கள் நாய்களால் கடிப்படுவதும், நாய்கள் துரத்துவதால் விபத்துகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. இதனால் நாய்களை ஷெல்டர்களில் அடைக்க வேண்டும் என குரல்கள் வலுத்த நிலையில், அதற்கு எதிராக நாய் பிரியர்கள் வழக்குத் தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பொது இடங்களில் நாய்களால் ஆபத்து ஏற்படுவதாக அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களான ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாய்களை அப்புறப்படுத்தி ஷெல்டர்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி பொது இடங்களில் நாய்களினால் ஏற்படும் பிரச்சினைகளை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K