தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, இன்று காலை 10 மணி வரை கீழ்க்கண்ட 7 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன:
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
தூத்துக்குடி
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.