திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா என்பது உலகப்புகழ் பெற்றது என்பதும், இந்த விழாவை காண்பதற்குத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும் என்று கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பக்தர்களுக்குத்தேவையான அனைத்து வசதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.