வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை பெய்யும் பகுதிகள்: அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, புதுவை மற்றும் காரைக்கால்.
லேசானது முதல் மிதமான மழை பெய்யும் பகுதிகள்: கோவை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி.
இந்த நிலையில், மதுரையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.