தெற்கு அந்தமான் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த சூழல் காரணமாக, வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் வானிலை மாற்றங்களும், கனமழையும் ஏற்படக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.