சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் இன்று மழை பெய்யும்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது நவம்பர் 24ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26ஆம் தேதி வரை கடலோர தமிழகத்தின் பல பகுதிகளிலும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்தமான், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.