சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் அறிவிப்பின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. வரை தென்மேற்கு திசை நோக்கிச் சாய்ந்த நிலையில் பரவியுள்ளது.
இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மெதுவாக மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.