வங்கக்கடலில் இலங்கை அருகே தென்மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி மிகவும் மெதுவாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வருகிற நவம்பர் 19-ஆம் தேதிக்குள் அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றங்கள் காரணமாக, வடகிழக்குப் பருவமழை அடுத்த ஓரிரு நாட்களில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது.