கன மழைக்கான எச்சரிக்கை காரணமாக, எஸ்.ஐ.ஆர். தொடர்பாக சென்னையில் நாளை அதாவது நவம்பர் 17, அன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினரால் பல்வேறு முறைகேடுகள் செய்யப்படுவதன் காரணமாக, 'விடியா தி.மு.க. மாடல்' அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நவம்பர் 17, திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக வெளியிட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 20, வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ராஜரத்தின மைதானம் அருகே நடைபெறும் என்றும் அ.தி.மு.க. நிர்வாகம் அறிவித்துள்ளது.