தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுங்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் என் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவேதான் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய இந்திய வானிலை ஆய்வு மையம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவை இல்லையெனில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருள்களையும் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.