வங்க கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதும், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், வங்கக்கடலில் நாளை அதாவது நவம்பர் 25ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை வங்க கடல் பகுதிகளில் நாளை இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருப்பதை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்களுக்கு கூடுதல் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.