தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த சில நாட்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நவம்பர் 22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது நவம்பர் 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலோர காவேரிப் படுகை மாவட்டங்களில் அதிக கனமழையை ஏற்படுத்தக் கூடும். வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.