வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டாலும், இன்று காலை முதல் வெயில் அடித்து வருவது கடந்த சில நாட்களாக குளிரில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.