தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள இந்திய தேர்தல் ஆணையம் எளிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் மொபைலில் இருந்து ECI <space> உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (உதாரணமாக: ECI SXT0000001) என டைப் செய்து 1950 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். உடனடியாக உங்கள் பெயர், பாகம் எண் மற்றும் தொகுதி விவரங்கள் பதிலுக்கு வரும். இதுதவிர, வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள பட்டியலை நேரில் பார்த்தோ அல்லது 'Voter Helpline' செயலி மற்றும் இணையதளம் வாயிலாகவோ சரிபார்க்கலாம்.
தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். 2026 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைவோர், படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் புதிய வாக்காளராக பதிவு செய்துகொள்ளலாம்.