சமூக ஊடக பிரபலமும், நடிகருமான ஜி.பி. முத்து, அவரது மனைவி அஜிதா மற்றும் உறவினர்கள் அனிதா, கணேசன் உள்ளிட்ட நான்கு பேர் மீது பக்கத்து வீட்டு பெண்மணியை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசிக்கும் ஜி.பி. முத்துவின் மகன்களுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலாமுதாவின் கணவர் முத்து மகேஷுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறே மோதலுக்கு காரணம்.
ஜிபி முத்துவின் மகன்கள் ரோட்டில் வந்தபோது, முத்து மகேஷ் கேள்வி எழுப்பியதால் சிறுவர்கள் அவரை முறைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிறிது நேரத்தில் ஜி.பி. முத்து முத்து மகேஷ் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அப்போது சமாதானம் பேச வந்த பால அமுதாவை, ஜி.பி. முத்துவின் மனைவி மற்றும் உறவினர்கள் கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பால அமுதாவுக்கு பற்கள் உடைந்து, தலை மற்றும் முழங்கையில் காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜி.பி. முத்துவின் குடும்பத்தினர் தாக்கியது உறுதியான நிலையில், அவர்கள் நான்கு பேர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.