Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

Advertiesment
ரொனால்டோ

vinoth

, புதன், 5 நவம்பர் 2025 (07:19 IST)
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, உலகளவில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார். இன்னும் அவர் மகுடத்தில் சூடப்படாத ஒரே சிறகாக உலகக் கோப்பை மட்டுமே உள்ளது.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அதை வென்று கையில் கோப்பையோடு தன் காதலி ஜார்ஜியானாவைத் திருமணம் செய்துகொள்ள உள்ளதக அவர் அறிவித்துள்ளார். ரொனால்டோவுக்கும் அவரது காதலி ஜியார்ஜினாவுக்கும் 5 குழந்தைகள் இருந்தபோதும் இதுவரை அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. சமீபத்தில் ஜியார்ஜினாவுக்கு திருமணத்துக்காக விலையுயர்ந்த வைரமோதிரம் ஒன்றை பரிசாக அளித்தார் ரொனால்டோ. 12 கேரட் மதிப்புள்ள அந்த வைர மோதிரத்தின் விலை இந்திய மதிப்பில் 25 கோடி ரூபாய் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?