கிரிக்கெட் உலகில் ஒரு காலகட்டம் வரை மிகச் சிறப்பாக வளர்ந்து வரும் அணியாக அமைந்தது ஜிம்பாப்வே. அந்த அணியை ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர் மற்றும் ஹீத் ஸ்ட்ரீக் ஆகியோர் மிகச்சிறப்பாக வளர்த்தெடுத்து வந்தனர். ஆனால் அவர்களின் ஓய்வுக்குப் பிறகு அந்த அணிக்கு மங்குதிசை தொடங்கியது.
அந்த அணியில் பெரிய அளவில் பேட்ஸ்மேன்களோ, பவுலர்களோ உருவாகவில்லை. அப்படியே ஒன்றிரண்டு பேர் உருவானாலும் அவர்களால் ஜிம்பாப்வே அணியைப் பழைய நிலைக்குக் கொண்டு செல்லமுடியவில்லை. அதனால் டெஸ்ட் விளையாடும் அங்கீகாரத்தையே இழந்துள்ளது ஜிம்பாப்வே.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனான ஷான் வில்லியம்சன் தான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக அறிவித்துள்ளார். அதனால் அவரது ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டோடு முடித்துக்கொள்ளப்படும் என்றும் அவரை இனிமேல் அணியில் எடுக்க மாட்டோம் என்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.